டெல்லி:

அமெரிக்காவில் பிரதமர் மோடி – டிரம்ப் சந்திப்பின் போது 2 பில்லியன் டாலர் மதிப்பிலான பறக்கும் கண்காணிப்பு கேமராக்கள் வாங்குவதை உறுதி செய்ய மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

2 நாள் பயணமாக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி 26ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது இந்தியா அமெரிக்காவிடம் இந்தியா கேட்டிருந்த 2 பில்லியன் டாலர் மதிப்பிலான 22 பறக்கும் கண்காணிப்பு கேமராக்களை பெறுவது குறித்து உறுதி செய்ய இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளன.

இந்த பறக்கும் கேமராக்கள் ஆயுதங்கள் எதுவும் இல்லாமல் வெறும் கேமரா கொண்டு மட்டுமே இயங்க கூடியது. இந்த பறக்கும் கண்காணிப்பு கேமராக்கள் வாங்கப்பட்டால் இந்திய பெருங்கடல் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படும்.

இதன் மூலம் 7 ஆயிரத்து 500 கி.மீ., வரை பயங்கராவாதிகள் ஊடுருவல், ஆக்கிரமிப்பு தடுப்பு கண்காணிப்பு, வானிலை , கடல் நிலை மாற்றம், உள்ளிட்ட பல கண்காணிப்பு பணிகளுக்கு உதவும் எனவும், பிரதமர் மோடி- டிரம்ப் சந்திப்பின் போது முக்கிய அம்சமாக இது இடம் பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.