அதிநவீன ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணையை இந்தியாவில் தயாரிக்க திட்டம்!

டில்லி:

ஷ்ய தயாரிப்பான அதிநவீன எஸ்-400 ஏவுகணைகளை, இந்தியாவில் தயாரிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத் தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வான் வழி பாதுகாப்புக்காக  ரஷ்யா சக்தி வாய்ந்த எஸ்-400 என்ற ஏவுகணையை உருவாக்கி யுள்ளது.  இந்த அதிநவீன ஏவுகணைகளை இந்தியாவுடன் கூட்டு சேர்ந்து தயாரிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது.

ஏவுகணைகள் தயாரிப்பு தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும், இதற்காக ஒப்பந்தங்கள் விரைவில் கையெழுத்தாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கெனவே ரஷ்யாவின், சுகோய்-30 ரக போர் விமானங்களையும், டி-90 ரக பீரங்கி டாங்குகளையும் உள்நாட்டில் தயாரிக்க இந்தியா உரிமம் பெற்றுள்ள நிலையில், தற்போது எஸ்-400 அதிநவீன ஏவுகணைகள் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளது.

இதற்கிடையே எஸ்400 ஏவுகணை இந்தியாவில் தயாரிக்கப்படும் முன்பே ஏவுகணையை வாங்க துருக்கி ஒப்பந்தம் போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.