பாக் – வங்கதேச எல்லைகளை மூட மத்திய அரசு திட்டம்


டில்லி : பாகிஸ்தான் வங்கதேசநாடு களுடனான சர்வதேச எல்லைகளை மூட, திட்டமிட்டுள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சர், ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

ம.பி., மாநிலம், தெகன் பூரில் உள்ள எல்லை பாதுகாப்பு படை அகாடமியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ராஜ்நாத்சிங் பங்கேற்றார்.
அப்போது அவர். “பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகியநாடுகளுடனான, சர்வதேச எல்லைகளை மூட, அரசுதிட்டமிட்டுள்ளது. அடுத்த வருடத்துக்குள் பாக்., உடனான எல்லை மூடப்படும். அங்கிருந்து இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவல் அதிகரித்து வருவதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தநடவடிக்கை, உள்துறை செயலரால், கண்காணிக்கப்படும். மாநில அளவில், தலைமை ச்செயலர்கள் கண்காணிப்பார்கள்.
இந்த பணியில் நவீன தொழில் நுட்பம் பயன்படுத்தப்படும்” என்றார்
மேலும், “சர்வதேச எல்லை தொடர்பான பேச்சுகுறித்தவிதிகளில், எல்லைபாதுகாப்புபடை, மாற்றங்களை கொண்டுவந்துள்ளது” என்றும் தெரிவித்தார்.