சிட்னி டெஸ்ட் – டிராவை நோக்கி விளையாடும் இந்தியா!

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி டிராவை நோக்கி உறுதியாக ஆடி வருகிறது.

தேநீர் இடைவேளை வரை, மொத்தம் 100 ஓவர்களில் 280 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்தியா, அடுத்த 16 ஓவர்களுக்கு, வெறும் 21 ரன்களை மட்டுமே எடுத்து, மேலும் எந்தவொரு விக்கெட்டையும் இழக்காமல் ஆடி வருகிறது.

இன்னும் 15 ஓவர்களே வீசப்பட வ‍ேண்டிய நிலையில், இந்தப் போட்டி ‘டிரா’ ஆவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

தற்போது களத்திலுள்ள அனுமன் விஹாரி, ஆஸ்திரேலிய பவுலர்களை நன்றாகவே சோதித்து வருகிறார். தற்போதுவரை, 112 பந்துகளை சந்தித்துள்ள அவர் எடுத்தது வெறும் 7 ரன்கள் மட்டுமே. அவருடன் இணைசேர்ந்து ஆடிவரும் அஸ்வின், 87 பந்துகளில் 24 ரன்களைச் சேர்த்துள்ளார்.