கவனமாக, நிதானமாக ஆடிவரும் இந்திய அணி!

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட்டில், இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸில், விக்கெட்டை விரைவில் இழந்துவிடக்கூடாது என்ற கவனத்தில், நிதானமாக ஆடி வருகிறது.

துவக்க வீரராக களமிறங்கியிருப்பவர் ஹிட் மேன் ரோகித் ஷர்மா. அவருடன் ஜோடி சேர்ந்திருப்பவர் கடந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஷப்மன் கில்.

இதுவரை, 42 பந்துகளை சந்தித்துள்ள ரோகித் ஷர்மா, 2 பவுண்டரிகளுடன் 11 ரன்களை அடித்துள்ளார். மொத்தம் 48 பந்துகளை சந்தித்துள்ள ஷப்மன் கில், 4 பவுண்டரிகளுடன் 22 ரன்களை அடித்துள்ளார்.

இன்றைய ஆட்டம் முடியும் வரை, இந்த இரண்டு வீரர்களும் விக்கெட் இழக்காமல் இருந்தால், இந்திய இன்னிங்ஸ் பெரியளவில் எழுச்சிபெறும். குறைந்தபட்சம் இருவரும் சேர்ந்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பாவது அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.