முதல் டி20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சு

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

india

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி20, 4 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. அதன்படி மூன்று போட்டிகள் கொண்ட முதல் டி20 இன்று பிரிஸ்பைன் நகரில் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். ஆஸ்திரேலியா அணி தனது சொந்த மண்ணில் விளையாடுவதால் இரு அணிகளுக்கிடையேயான போட்டிகள் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தொடரில் தோனி, அஸ்வின் உள்ளிட்டோரை தேர்வுக்குழு தவிர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.