சீனாவின் வர்தகக் கல்வி கல்லூரியின் தலைவரான இந்திய பேராசிரியர்

பீஜிங்

சீனாவில் உள்ள உலகப் புகழ்பெற்ற சீனக் கல்லூரியின் தலைவராக இந்திய பேராசிரியர் தீபக் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார்.

சீனாவில் ஷாங்காய் நகரில் உலகப்புகழ் பெற்ற வர்த்தகக் கல்லூரியான சீனா ஐரோப்பா சர்வதேச வர்த்தகக் கல்லூரி அமைந்துள்ளது.   இதில் பெட்ரோ நியூனோ என்பவர் தலைவராக  கடந்த 28 வருடங்களாக  பணி புரிந்து வருகிறார்.   தற்போது அவருக்கு பதில் 61 வயதாகும் இந்திய பேராசிரியரான தீபக் ஜெயின் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜெயின் ஏற்கனவே உலகின் புகழ் பெற்ற கல்லூரிகளில் பணி புரிந்தவர் ஆவார்.  அசாம் மாநிலத்தை சேர்ந்த தீபக் ஜெயின் சிகாகோவில் வசித்து வருபவர் ஆவார்.  ஏற்கனவே இவர் இதே கல்லூரியில் மாதத்தில் 10 முதல் 15 நாட்கள் ஷாங்காயில் பணி புரிந்து வந்துள்ளார்.  தற்போது நிரந்தரமாக ஷாங்காய் நகரில் தங்க உள்ளார்.