ஆசியாவின் வேலையில்லா திண்டாட்டத்தில் இந்தியாவுக்கு 12வது இடம்

டில்லி: 

சியாவில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டத்தில் இந்தியா 12வது இடத்தில் உள்ளது.

ஆசியாவில் உள்ள 37 நாடுகளில் வேலையில்லாத மக்கள் உள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா 12வது இடத்தில் உள்ளது. 2017ம் ஆண்டில் இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 3.6 சதவீதமாகும். பூடானில் 2.4 சதவீதம், நேபாள் 3.2 சதவீதம், பாகிஸ்தானில் 5.9 சதவீதம் என்ற நிலையில் உள்ளது.

ராஜ்யசபாவில் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்கவார் அளித்த எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பில் உள்ள புள்ளி விவரங்களை அடிப்படையாக வைத்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபிய நாடுகளில் வேலையில்லா திண்டாட்டம் அதிகளவில் உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ன் வேலையில்லாத் திண்டாட்டம் 3.8 சதவீதமாகவும், சவுதி அரேபியாவில் 5.5 சதவீதமாகவும் உள்ளது.

இலங்கை 4.6 சதவீதத்துடன் 17வது இடத்தில் உள்ளது. ரஷ்யா 5.3 சதவீதம், ஓமன் அதிகப்படியாக 16.9 சதவீதமாக உள்ளது. தொடர்ந்து ஏமன் 16 சதவீதம், ஜோர்டான் 14.9 சதவீதம் என்ற நிலையில் உள்ளன.

 

கார்ட்டூன் கேலரி