சர்வதேச மனித மேம்பாட்டு பட்டியலில் இந்தியாவுக்கு 130வது இடம்

டில்லி:

சர்வதேச மனித மேம்பாட்டு பட்டியலில் இந்தியாவுக்கு 130 இடம் கிடைத்துள்ளது.

ஐ.நா. மனித மேம்பாட்டு ஆய்வு முடிவுகள் இன்று வெளியானது. ஆரோக்கிய வாழ்க்கை, கல்வி, வாழ்க்கை தரம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு மனித மேம்பாட்டு குறியீட்டு பட்டியல் தயார் செய்யப்படுகிறது. இந்த பட்டியலில் இந்தியா 130-வது இடம் பிடித்துள்ளது.

தெற்காசிய நாடுகளின் மனிதவள மேம்பாட்டு குறியீட்டு பட்டியலின் சராசரி புள்ளிகள் என 0.638 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா 0.624 புள்ளிகள் பெற்றுள்ளன. பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் பட்டியலில் முறையே 136 மற்றும் 150வது இடத்தில் உள்ளது.

நார்வே, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகள் முதன்மை இடங்களை பிடித்துள்ளன. தெற்கு சூடான், மத்திய ஆப்ரிக்க குடியரசு மற்றும் புருண்டி போன்ற நாடுகள் கடைசி இடங்களில் உள்ளன. 1990-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017-ம் ஆண்டு இந்தியர்களின் தனிநபர் வருமானம் 266 சதவீதம் உயர்ந்துள்ளது.

அரசியல், சமூக, பொருளாதார நிலைகளில் ஆண்களை விட பெண்கள் மிக பின் தங்கியுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல்களில் 11.6 சதவீதம் மட்டுமே பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: India ranked 130th on the International Human Development Index, சர்வதேச மனித மேம்பாட்டு பட்டியலில் இந்தியாவுக்கு 130வது இடம்
-=-