கொரோனா பாதிப்பில் உலக அளவில் 6வது இடத்தில் இந்தியா….

டெல்லி:
ந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,  உலகளவிலான கொரோனா பாதிப்பில்  6வது இடத்திலிருந்த இத்தாலியை பின்னுக்கு தள்ளிவிட்டு, இந்தியா  6வது இடத்திற்கு முன்னேறி வந்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,26,770-லிருந்து 2,36,657-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.   “உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,348-லிருந்து 6,642-ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,09,462-லிருந்து 1,14,073-ஆக உயர்ந்துள்ளது.

உலக அளவில் 6,850,236 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களில் 398,244 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் தவிர பாதிக்கப்பட்டவர்களில் 3,351,229 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 130,529 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் 4.906 பேர் உயிரிழந்தும் உள்ளனர். தற்போது 3,109,983 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 15 நாட்களில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து  உலக அளவில் கொரோனா பாதிப்பில் இத்தாலியை விஞ்சி 6-வது இடத்துக்கு இந்தியா சென்றுள்ளது.