பொதுமக்களிடம் துப்பாக்கி: உலக பட்டியலில் 2ஆம் இடத்தில் இந்தியா!

பொதுமக்களிடம் துப்பாக்கி புழக்கத்தில் இருப்பதில்  உலக பட்டியலில் 2ஆம் இடத்தில் இந்தியா இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

உலக அளவில் துப்பாக்கிகளின் பயண்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் துப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எளிதாக உள்ளது. அதே சமயம் இந்தியா போன்ற நாடுகளில் துப்பாக்கி லைசன்ஸ் பெறுவது கடினம். ஆனாலும் நாளுக்கு நாள் தனிப்பட்ட நபர்களின் பாதுகாப்புக்காக துப்பாக்கி லைசென்ஸ் பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

உலகில் தற்போது 100 கோடியாக துப்பாக்கி பயன்பாடு உள்ளது. இது கடந்த 2006ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 138 பில்லியன் அதிகமாகும். அதாவது. சொந்த பயன்பாட்டிற்கு துப்பாக்கி வைத்திருக்கும் பொது மக்கள் மற்றும் விஐபிக்கள் இந்தப் பட்டியலில் வருவார்கள்.

சமீபத்தில் சிறு ஆயுதங்கள் ஆய்வு அறிக்கை வெளியாகி இருந்தது. இதில் 85 சதவீத துப்பாக்கிகள் பொது மக்களிடமும், மீதம் ராணுவம் மற்றும் சட்ட அமலாக்க ஏஜென்சிகளிடம் உள்ளது என்பது தெரிய வந்திருக்கிறது.  துப்பாக்கி வைத்திருப்பவர்கள் பட்டியலில் உலகிலேயே இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது.  அமெரிக்கா இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. கடந்த 2017ல் இந்தியாவில் 71 மில்லியன் துப்பாக்கிகள் சட்ட ரீதியாக பதிவு செய்தும், சட்டத்திற்கு விரோதமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

இந்தியர்களிடம் தான் அதிகளவில் துப்பாக்கி புழக்கத்தில் உள்ளது. ஆனாலும்  100 பேருக்கு எத்தனை பேர் வைத்திருக்கின்றனர் என்று பார்க்கும்போது அமெரிக்காதான் முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 100 பேர் 120 துப்பாக்கிகள் வைத்து இருப்பதும், இதுவே இந்தியாவில் 100 பேருக்கு 5.9 பேர் துப்பாக்கிகள் வைத்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

 

 

You may have missed