டாலோஸ்

பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பில் பாகிஸ்தான் மற்றும் சீனாவை விட பின் தங்கி 62 ஆம் இடத்தில் இந்தியா உள்ளது.

வாழ்க்கைத் தரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, எதிர்கால திட்டங்கள் ஆகியவைகளைக் கொண்டு பொருளாதார வளர்ச்சி பொதுவாகக் கணக்கிடப் படுகிறது.   சமீபத்தில் அந்த அடிக்கபடையில் உலகப் பொருளாதார கூட்டமைப்பு ஆய்வு நடத்தியது.   அந்த ஆய்வில் தயாரிக்கப் பட்ட பட்டியலை இப்போது அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

அந்தப் பட்டியலில் இந்தியா சென்ற வருடம் இருந்த 60ஆம் இடத்தில் இருந்து தற்போது 62ஆம் இடத்துக்கு வந்துள்ளது.     அண்டை நாடுகளான நேபாளம் 22ஆம் இடத்திலும், வங்காளதேசம் 34 ஆம் இடத்திலும் இலங்கை 40ஆம் இடத்திலும் உள்ளன.    இந்தியாவுடன் எல்லாவற்றிலும்  போட்டியிட்டு வரும் சீனா 26ஆம் இடத்திலும்  பாகிஸ்தான் 47ஆம் இடத்திலும் உள்ளன.   ஆசிய நாடுகளில் இந்தியா மிகவும் பின் தங்கி உள்ளது.

வளர்ந்து வரும் நாடுகளில் லித்துவேனியா முதல் இடத்திலும், வளர்ச்சி அடைந்த நாடுகளில் நார்வே முதல் இடத்திலும் உள்ளன.