டெல்லி: அரசின் சேவைகளைப் பெறுவதற்கு, லஞ்சம்பெறப்படுவதில்,  ஆசிய நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக ஊழல் கண்காணிப்பு அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.

ஆசிய நாடுகளில் புழக்கத்தில் உள்ள லஞ்ம் தொடர்பாக ஊழல் கண்காணிப்பு அமைப்புகளில் ஒன்றான கரப்ஷன் வாட்ச்டாக் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு ஆய்வு நடத்தியது. இந்த அமைப்பின் சார்பில், நாடு முழுவதும சுமார்  2,000 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வானது,  கடந்த ஜூன் மாதம் 17-ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 17-ஆம் தேதி வரை நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ள அந்த அமைப்பு தற்போது  ஆய்வறிக்கையை வெளியிட்டு உள்ளது.

அதில்,

அரசின் சேவைகளைப் பெறுவதற்கு லஞ்சம் கொடுப்பது அதிகமாகக் காணப்படும் நாடுகளில் இந்தியா 39 சதவீதமாக உள்ளது என்றும், இது ஆசியாவிலேயே முதலிடம் என்றும் தெரிவித்து உள்ளது.

பொது சேவைகளைப் பெற தனிப்பட்ட தொடர்புகளைப் பயன்படுத்தும் நபர்களின் விகிதம் 46 சதவீதமாகவும் உள்ளது.

மேலும், அரசின் சேவைகளைப் பெற ஏன் லஞ்சம் கொடுத்தீர்கள் என்ற கேள்விக்கு,  அதிகாரிகளின் வற்புறுத்தல் காரணமாகவே லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை உருவாகிறது என்று 50 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர்.

 32 சதவீதம் பேர் சேவையைப் பெற லஞ்சம் கொடுப்பதைத் தவிர வேறுவழியில்லை என்றும், தெரிவித்துள்ளனர்.

லஞ்சம் பெறப்படுவது அதிகாரிகள் மீது ஊழல் குறித்து புகாா் தெரிவித்தால் அதற்கான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று 63 சதவீத பேர் அச்சம் தெரிவித்து உள்ளனர்.

.மேலும் லஞ்சத்தைத் தடுக்க தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  க மத்திய, மாநில அரசுகள், பொது சேவைகளை வழங்குவதில் தங்களது நிர்வாகத்தைச் சீரமைக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் குடிமக்கள் தங்களது அத்தியாவசிய சேவைகளை எளிதில் பெறுவதற்கு சுமூகமான நட்புச் சூழலை ஏற்படுத்துதல் வேண்டும். அதாவது ஆன்-லைன் சேவைகள் போன்றவற்றை வழங்க வேண்டும்.

அரசின் சேவைகளைப் பெறுவதற்கு சிக்கலான வழிமுறைகள் காணப்படுவது, சேவைகளைப் பெறுவதில் ஏற்படும் தாமதம், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது, போதிய கண்காணிப்பு இல்லாதது உள்ளிட்டவற்றின் காரணமாக இந்தியாவில் லஞ்சம் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளது.

அதே நேரத்தில் ஊழல் தொடர்பாக புகார் அளித்தால் தங்களுக்குத் தேவையான நியாயம் கிடைக்கும் என மக்கள் நம்பிக்கை அளிக்கும் வகையில் அரசுகள் செயல்பட வேண்டும்.

மக்களுக்கான அத்தியாவசிய சேவைகளை இணையவழியில் விரைவாக வழங்கப்படுவதை அரசுகள் உறுதிசெய்ய வேண்டும் என்றும் அந்த ஆய்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

ஆசியாவில் லஞ்சம் அதிகம் காணப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவைத் தொடா்ந்து கம்போடியா, இந்தோனேசியா ஆகியவை உள்ளன. மாலத்தீவுகள், ஜப்பான் நாடுகளில் குறைந்த அளவில் லஞ்சம் புழங்குவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.