இங்கிலாந்தை வச்சு செய்யும் இந்தியா – 340 ரன்களை எட்டியது!

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் இன்னிங்ஸில், இந்திய அணி பெரிய முன்னிலையை நோக்கி சென்று கொண்டுள்ளது. இன்றைய தினம் இந்திய அணி விக்கெட் எதையும் இதுவரை இழக்கவில்லை.

நேற்று, 7 விக்கெட் இழப்பிற்கு 294 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இன்று மூன்றாம் நாள் ஆட்டம் துவங்கியது. வாஷிங்டன் சுந்தரும், அக்ஸாரும் ஆட்டத்தை தொடர்ந்தனர்.

இருவருமே பிரமாதமாக ஆடிவருகின்றனர். தற்போதுவரை 150 பந்துகளை சந்தித்துள்ள சுந்தர், 1 சிக்ஸர் & 10 பவுண்டரிகளுடன் 81 ரன்களை அடித்துள்ளார். 72 பந்துகளை சந்தித்துள்ள அக்ஸார், 1 சிக்ஸர் & 5 பவுண்டரிகளுடன் 33 ரன்களை அடித்துள்ளார்.

இந்திய அணி, தற்போதைய நிலையில், 340 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து, இங்கிலாந்தைவிட 135 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்த ஜோடி இன்னும் நிலைத்துநின்று ஆடி ரன்கள் சேர்க்கும் நிலையில், இந்தியா 200 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்றால், இங்கிலாந்தை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்த வாய்ப்பு கிடைக்கும்.