24 மணி நேரத்தில் 1,463: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 28,380 ஆக உயர்வு

டெல்லி:

ந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1463 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,380 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பினால் சிகிச்சை பலனின்றி கடந்த 24 மணி நேரத்தில் 60 பேர் இறந்துள்ளதாகவும், இதையடுத்த பலியானோர் எண்ணிக்கை 886 ஆக உயர்ந்துள்ளது.

அதேவேளையில்  இதுவரை 6,362  பேர் குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அங்க 8,068 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதைத் தொடர்ந்து குஜராத்தில் 3,301 பேரும், தில்லியில் 2,918, மத்தியப் பிரதேசத்தில் 2,168 பேரும், ராஜஸ்தானில் 2,185 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசம்(1955) மற்றும் தமிழகத்தில்(1885) பாதிப்பு 2 ஆயிரத்தை நெருங்குகிறது.

கடந்த 28 நாள்களில் 16 மாவட்டங்களில் யாருக்கும் கரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

அதேபோன்று கடந்த 14 நாள்களில் 25 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 85 மாவட்டங்களில் ஒருவர் கூட கொரோனா பாதிப்புக்கு ஆளாகவில்லை.

இந்த தகவலை இன்று மாலை மத்திய சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளது.