டோக்லாமில் சீனா மீண்டும் அத்துமீறல்….அமெரிக்கா புகாருக்கு இந்தியா மறுப்பு

--

டில்லி :

இந்தியா, பூடான், சீனா ஆகிய 3 நாடுகளின் சந்திப்பு பகுதியான டோக்லாமில் சீன ராணுவம் கட்டுமான பணிகளை மேற்கொண்டது. இதை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. இரு நாடுகளும் அந்த பகுதியில் 73 நாட்கள் படைகளை நிறுத்தியிருந்தன. பின்னர் பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு ஏற்பட்டது.

இந்நிலையில் டோக்லாமில் சீனா சாலை அமைக்கும் பணிகளை மீண்டும் தொடங்கியுளுளது. அதை தடுக்க பூட்டான், இந்தியா முயற்சிக்கவில்லை எஜ்று அமெரிக்காவுக்கான தெற்கு, மத்திய ஆசியா துணை உதவி செயலாளர் அலைஸ் ஜி வெல்ஸ் கூறியுள்ளார்.

இது குறித்து மத்திய அமைச்சர் விகே சிங் ராஜ்யசபாவில் பேசுகையில், ‘‘டோக்லாமில் சீனா எந்தஒரு கட்டமைப்பு பணியையும் மேற்கொள்ளவில்லை. இரு நாடுகள் தரப்பிலும் எல்லை நிலைபாடு சரியான முறையில் பின்பற்றப்படுகிறது. எல்லையில் அமைதி முக்கியம் என்று சீனாவிடம் உயர்மட்ட அளவில் இந்தியா பேசியுள்ளது’’ என்றார்.