மாஸ்டர்ஸ் கபடி: தென்கொரியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு இந்தியா தகுதி

துபாய்:

துபாயில் மாஸ்டர்ஸ் கபடி போட்டி நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த போட்டியில் தென்கொரியாவும், இந்திய அணியும் மோதின.

தென்கொரியா அணியை 36–20 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. நாளை நடக்கும் இறுதிப் போட்டியில் இந்தியா, ஈரானை எதிர்கொள்கிறது.