மும்பையில் உள்ள ஜின்னா வீட்டிற்கு உரிமை கோரும் பாகிஸ்தான் – மறுக்கும் இந்தியா!

மும்பையில் உள்ள முகமது அலி ஜின்னாவின் வீடு தங்களுக்கு சொந்தமானது என பாகிஸ்தான் கூறியதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

JINNAHHOUSE

மும்பையில் உள்ள மலபார் ஹில் பகுதியில் உள்ள வீட்டில் 1930ம் ஆண்டு முகமதி அலி ஜின்னா வாழ்ந்து வந்தார். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு அந்த வீடு பராமரிக்கப்படவில்லை. தற்போது ஜின்னா வாழ்ந்த வீடு சீரமைக்கப்பட்டு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும் என மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அந்த வீட்டிற்கு பாகிஸ்தான் உரிமைக் கோரியுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் முகம்மது பைசல் கூறுகையில், “ மும்பையில் உள்ள முகமதி அலி ஜின்னா வீடு பாகிஸ்தானிற்கு சொந்தம் என்பதை இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. அதனை இப்போது வேறு யாரும் உரிமைக் கொண்டாட அனுமதிக்க மாட்டோம் “ என கூறியினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. ” ஜின்னா வீடு இந்திய அரசுக்கு சொந்தமானது. அதனை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது “ என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.