லண்டன்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஜுன் 23ம் தேதி வரையிலான நிலவரப்படி, 11 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி முதலிடம் பெற்றுள்ளது. இதில் 5 வெற்றிகள் மற்றும் 1 இலவசப் புள்ளி ஆகியவை அடங்கும்.

ஆஸ்திரேலியா 5 வெற்றி, 1 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று இரண்டாமிடத்திலும், இந்தியா 4 வெற்றி மற்றும் 1 இலவசப் புள்ளியுடன் மொத்தம் 9 புள்ளிகள் பெற்று மூன்றாமிடத்திலும், இங்கிலாந்து 4 வெற்றி மற்றும் 2 தோல்வியுடன் 8 புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்திலும் உள்ளன.

இலங்கை 6 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும், வங்கதேசம் 5 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும், பாகிஸ்தான் 5 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும், மேற்கிந்திய அணிகள் 3 புள்ளிகளுடன் எட்டாவது இடத்திலும், தென்னாப்பிரிக்கா 3 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்திலும், ஆஃப்கானிஸ்தான் புள்ளிகள் எதுவுமின்றி கடைசி இடத்திலும் உள்ளன.