டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.  கடந்த 24 மணி நேரத்தில் 3,29,942 பேர் பாதிப்பு, 3,876  பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவின் கோரத்தாண்டவத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், தொற்று பரவல் கட்டுக்குள் வராமல் நீடித்து வருகிறது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள தொற்று பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று  வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

நேற்று ஒரே நாளில்  3,29,942 பேர் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,56,082 ஆக உயர்ந்துள்ளது. இதகால்,  கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்  82.39% ஆக அதிகரித்துள்ளது.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 3,53,818 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், நாட்டில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,90,27,304 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில்  3,876 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,56,082 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர்  1.09 சதவிகிதம் ஆக அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்ட 37,15,221 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் சிகிச்சை பெறுவோர் சதவிகிதம் 16.53% ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை  நாடு முழுவதும் 17,27,10,066 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.