டெல்லி: நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலை அசூர வேகத்தில் பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக மேலும் 3,86,452 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதுடன்,  3498 பேர் உயிரிழந்துள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக உலக நாடுகளை புரட்டிபோட்டு வரும் கொரோனா எனப்படும் கண்ணுக்கு தெரியாத வைரஸ் தற்போது, 2வது அலையாக மீண்டும் உருமாறிய நிலையில் பரவி வருகிறது. அதன் அசூர வேக பரவலை கட்டுப்படுத்துவதில் இந்தியா திணறி வருகிறது. தொற்று பாதிப்பு அதிகரிப்பு காரணமாக, மருத்துவ தட்டுப்பாடுகளும் ஏற்பட்டுள்ளன. இதனால் உயிர் பலிகளும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், நேற்றைய (29ந்தேதி) தொற்று பாதிப்பு  குறித்து மத்திய சுகாதாரத்துறை தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி,

கடந்த 24 மணி நேரத்தில் 3,86,452   பேர் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு 1,87,62,976 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 3498 பேர் உயிரிழந்ததையடுத்து, இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 2,08,330 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு குணமாகி  2,97,540 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதுடன், இதுவரை 1,53,84,418 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போதைய நிலையில் நாடு முழுவதும் 31,70,228 பேர் சிகிச்சை  பெற்று வருகின்றனர்.

இதுவரை 15,22,45,179 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.