டெல்லி:  இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தொர்ந்து உயர்ந்து வருகிறது. தினசரி பாதிப்பில் உலக நாடுகளிலேயே முதலிடத்தில் தொடரும் இந்தியாவில், கடந்த 3 நாட்களாக சராசரி 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பபட்டு வருகின்றனர். தினசரி உயிரிழப்பும் 4 ஆயிரத்தை கடந்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 4,01,078 பேர் புதியதாக கொபரோனா  பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.  இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 18 லட்சத்து 92 ஆயிரத்து 676 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 4,187 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இதுவரை உயிரிழந்தோர்  மொத்த எண்ணிக்கை 2,38,270 ஆக உயர்ந்து உள்ளது.  நேற்று 3,915 ஆகவும், நேற்று முன்தினம் 3,980 ஆகவும் இருந்தது.  தற்போது 4 ஆயிரத்தை கடந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 18 ஆயிரத்து 609 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 79 லட்சத்து 30 ஆயிரத்து 960 ஆக உயர்வடைந்து உள்ளது.

தற்போதைய நிலையில் நாடு முழுவதும் 37,23,446 பேர் பெருந்தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொற்று பரவலை தடுக்கும் வகையில், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் தடுப்பூசி,. இதுடிர 16 கோடியே 73 லட்சத்து 46 ஆயிரத்து 544 பேருக்கு செலுத்தப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும  கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் 2வது அலை பிற உலக நாடுகளை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.   ஏப்ரல் மாத முதல் வாரத்தில் இருந்து சீராக எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் உள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பரவலை தடுக்க தமிழகம் உள்பட பல மாநிலங்களில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.