இந்தி சுற்றுப் பயணம் நடத்த ஐநாவுக்கு இந்தியா கோரிக்கை

நியூயார்க்

நா சபையில் இந்தி சுற்றுப் பயணம் நடத்த இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

ஐநா சபைக்கு வரும் பார்வையாளர்கள் சபையை சுற்றி சுற்றுப் பயணம் செய்வது வழக்கமாகும். இந்த பயணம் சுமார் 45 நிமிடத்தில் இருந்து ஒரு மணி நேரம் நடக்கும். அப்போது பார்வையாளர்களுக்கு விளக்கங்கள் ஆறு மொழிகளில் அளிக்கப்ப்படுகிறது. ஒவ்வொரு பயணமும் அந்த மொழியின் பெயரால் அழைக்கப்படுகிறது.

தற்போது அரபி, சீன மொழி, ஆங்கிலம், பிரஞ்சு, ரஷியன் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் விளக்கம் அளிக்கப்படுகிறது. இவை தவிர ஜெர்மன், இத்தாலி, கொரியன் மற்றும் போர்ச்சுகீசிய மொழிகளில் சுற்றுப்பயணங்கள் நடத்தப்படுகின்றன. இந்த பயணத்துக்கு பெரியவர்களுக்கு 22 டாலரும் சிறியோர் மற்றும் மாணவர்களுக்கு 15 டாலரும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்தியாவின் சார்பில் ஐநாவின் இந்திய உறவு அமைச்சர் மிஸ்ரா, “ஐநா சபையின் சுற்றுப்பயணம் நியூயார்க் வரும் இந்தியர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. எனவே அவர்களின் வசதிக்கிணங்க இனி இந்திய மொழியான இந்தியிலும் சுற்றுப்பயணம் அமைக்க வேண்டும்.

இந்தியாவில் பல மொழிகள் பேசப்பட்டாலும் இந்தியர்கள் வேற்றுமையில் ஒற்றுமையை காண்பார்கள். எனவே இந்தியாவில் அதிகம் பேரால் பேசப்படும் இந்தி மொழிக்கு பெருமை அளிப்பது இந்தியர்களுக்கு பெருமை அளிப்பதற்கு சமமாகும்.” என ஐநா சபைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.