வெறும் 4 பவுலர்கள்தான் – ஆனாலும் ஆஸ்திரேலியாவை 191 ரன்களில் மடக்கிய இந்தியா!

அடிலெய்டு: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில், 191 ரன்களுக்கு ஆட்டமிழந்து, இந்தியாவைவிட 53 ரன்கள் பின்தங்கியுள்ளது ஆஸ்திரேலியா. இந்திய அணி வெறும் 4 பவுலர்களை மட்டுமே பயன்படுத்தி சாதித்தது.

ஆஸ்திரேலியா தரப்பில், விக்கெட் கீப்பர் டிம் பெய்னே, அதிகபட்சமாக 73 ரன்களை விளாசினார். மார்னஸ் லபுஷேன் 47 ரன்களை அடித்தார். அவரை அவுட் செய்யும் வாய்ப்புகள் பலமுறை நழுவவிடப்பட்டன.

அபாய வீரர் ஸ்மித் வெறும் 1 ரன்னுக்கு அவுட்டானார். மற்ற யாரும் சொல்லிக்கொள்ளும் வகையில் ஆடவில்லை. எனவே, இறுதியாக, 191 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது ஆஸ்திரேலியா.

இந்தியா தரப்பில், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், உமேஷ் 3 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இன்னிங்ஸ் முழுவதும் வெறும் 4 பந்துவீச்சாளர்கள் மட்டுமே பந்துவீசி இதை சாதித்துள்ளனர். முகமது ஷமிக்கு மட்டும் ஒரு விக்கெட்கூட கிடைக்கவில்லை.