உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை – இரண்டாமிடத்தில் நீடிக்கும் இந்திய அணி!
துபாய்: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்துக்கான புள்ளிப் பட்டியலில், இந்திய அணி இரண்டாம் இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது.
இந்திய அணி, மொத்தம் 72.2 சதவிகித புள்ளிகள் பெற்று தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. பாக்ஸிங் டே டெஸ்ட் வெற்றியின் மூலம் இந்திய அணிக்கு கூடுதலாக 30 புள்ளிகள் கிடைத்தன.
அதேசமயம், மொத்தம் 76.6 சதவிகித புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது ஆஸ்திரேலியா. நியூசிலாந்து அணி மூன்றாவது இடத்திலும், இங்கிலாந்து நான்காவது இடத்திலும், பாகிஸ்தான் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.