தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக டெஸ்ட் சாம்பியன் பட்டம்..!

துபாய்: ஐசிசி டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக வென்றுள்ளது இந்திய கிரிக்கெட் அணி.

இதன்பொருட்டு, 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசுத்தொகை இந்திய அணிக்கு கிடைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் போட்டியை முதன்முதலாக கைப்பற்றியது இந்திய அணி. அதனையடுத்து டெஸ்ட் போட்டி தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்தது விராத் கோலியின் அணி.

இரண்டாமிடத்தில் நியூசிலாந்து அணியும், மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில், முறையே தென்ஆப்ரிக்க மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் வருகின்றன.

“டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பெறுவதென்பது எப்போதுமே சிறப்புவாய்ந்த ஒன்று. டெஸ்ட் போட்டிகளின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்துள்ளோம். இந்த முதலிடம் என்ற பட்டம் நமக்கு கூடுதல் மகிழ்ச்சியைத் தருகிறது” என்று கூறியுள்ளார் இந்திய அணி கேப்டன் விராத் கோலி.

– மதுரை மாயாண்டி

Leave a Reply

Your email address will not be published.