அயோத்தி தீர்ப்பு குறித்த பாகிஸ்தானின் கருத்துக்கு வெளியுறவு அமைச்சகம் கண்டனம்!

புதுடில்லி: அயோத்தி தீர்ப்பு வெளியான காலகட்டம் குறித்து பாகிஸ்தான் எதிர்மறையான கருத்து தெரிவித்ததற்காக வெளியுறவு அமைச்சகம் (எம்.இ.ஏ) எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் இந்தியாவுக்கு உள்ளே நடப்பது என்று கூறியதோடு. “வெறுப்பை பரப்பும்” நோக்கத்துடன் இந்தியாவின் உள் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிக்க இஸ்லாமாபாத்தின் “நோயியல் கட்டாயத்தை“ வெளியுறவு அமைச்சகம் கண்டனம் செய்தது.

பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர், ஷா மஹ்மூத் குரேஷி, கர்தார்பூர் நடைபாதை திறப்பின் போது வெளிவந்திருக்கும் அயோத்தி தீர்ப்பானது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இல்லையென்றும், இந்தவொரு மகிழ்ச்சியான தருணத்தில் இதைத் தவிர்த்திருக்கலாம் எனவும் கருத்துத் தெரிவித்திருந்தார்.

“இந்தியாவிற்கு முற்றிலும் உட்பட்ட ஒரு சிவில் விவகாரம் தொடர்பாக இந்திய உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் பாகிஸ்தான் அளித்த தேவையற்ற மற்றும் நன்றியற்ற கருத்துக்களை நாங்கள் நிராகரிக்கிறோம்” என்று வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்தார்.

MEA செய்தித் தொடர்பாளர் மேலும் கூறுகையில், அயோத்தி பிரச்சினை சட்டத்தின் விதிமுறை தொடர்பானது என்றும் மற்றும் தீர்ப்பு அனைத்து மதங்களுக்கும் சமமான மரியாதையை உறுதி செய்தது.

“இது சட்டத்தின் விதிமுறை மற்றும் அனைத்து நம்பிக்கைகளுக்கும் சமமான மரியாதையாகும். இது அவர்களின் நெறிமுறைகளில் சாராத கருத்துக்கள். எனவே, பாக்கிஸ்தானின் புரிதல் இல்லாமை ஆச்சரியமல்ல என்றாலும், வெறுப்பை பரப்புவதற்கான வெளிப்படையான நோக்கத்துடன் நமது உள் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிக்க அவர்களின் நோயியல் நிர்பந்தம் கண்டிக்கத்தக்கது, ”என்று ரவீஷ் குமார் மேலும் கூறினார்.