ரஷ்யாவிடமிருந்து அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கிக் கப்பலை வாங்குகிறது இந்தியா

புதுடெல்லி:

அணுகுண்டு தாக்குதல் நடத்தும் நீர் மூழ்கிக் கப்பலை 5.5 பில்லியன் டாலருக்கு ரஷ்யாவிடமிருந்து வாங்க இந்தியா கையொப்பமிட இருக்கிறது.


அகுலா வகை நீர் முழ்கிக் கப்பலைப் போல் 2 கப்பல்களை ரஷ்யாவிடமிருந்து இந்தியா ஏற்கெனவே வாங்கியிருக்கிறது.
அதன்பிறகு சக்ரா 3 நீர்முழ்கிக் கப்பலை 5.5 பில்லியன் டாலருக்கு வாங்க கடந்த ஆண்டு இறுதி செய்யப்பட்டது.

இதற்கான ஒப்பந்தம் மார்ச் 7-ம் தேதி கையெழுத்தாகும். இந்த நீர்மூழ்கிக் கப்பல் 2025-ம் ஆண்டு தயாராகும். 2012-ம் ஆண்டு வாங்கப்பட்ட சக்ரா 2-க்கு மாற்றாக இந்த நீர்மூழ்கிக் கப்பல் இருக்கும்.

எதிரிகள் கண்டுபிடிக்கப்பட முடியாத அளவுக்கு தண்ணீருக்குள் பல மாதங்கள் இருக்கும் திறன் கொண்டதாக இருக்கும். அணு ஆயுதம் மட்டுமின்றி, வழக்கமான ஆயுதங்களையும் பயன்படுத்த ஏதுவாக சக்ரா 3 வடிவமைக்கப்படும்.

இதற்கான ஒப்பந்தம் இந்த வாரத்தில் கையெழுத்தாகும் என்று தெரிகிறது.