” எங்களை காட்டிலும் இந்திய அணியின் வீரர்கள் ஒருபடி மேல் தான் “ – பாகிஸ்தான் அணி கேப்டன்

” பாகிஸ்தான் அணியை விட இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் திறமை ஒருபடி மேல் தான் ” என்று அந்த அணியின் கேப்டன் சர்ஃப்ரஜ் அஹமது தெரிவித்துள்ளார்.

Sarfraz

14வது ஆசிய கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் பங்கேற்றன. லீக் சுற்றில் ஹாங்காங் மற்றும் இலங்கை அணிகள் தோல்வியடைந்த காரணத்தில் போட்டியில் இருந்து வெளியேறின. எஞ்சிய நான்கு அணிகளும் சூப்பர் லீக் சுற்றுக்கு முன்னேறின.

இந்த போட்டியில் பரம எதிரிகளாக இந்தியாவும், பாகிஸ்தானும் மோதியது. இரு அணிகளும் மோதிக்கொள்ளும் போட்டியை காண இரு நாட்டு ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்ப்பார்த்திருந்தனர். லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றில் பாக்கிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வரலாற்று வெற்றி பெற்றது. இந்த தோல்வியை தொடர்ந்து பாகிஸ்தான் வீரர்கள் நெட்டிசன்களின் விமர்சனங்களை எதிர்க்கொண்டனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃப்ரஜ் அஹமது இது குறித்து பேசுகையில், ” பாக்கிஸ்தான் அணியை விட இந்திய அணி வீரர்களின் திறமை ஒருபடி மேல் தான். ஆனால் இறுதி போட்டி என்றால் எங்கள் அணியின் செயல்பாடு வேறு விதமாக இருக்கும். அடுத்த போட்டியில் வெற்றிப்பெறுவதே எங்களின் முதல் இலக்கு “ என்று கூறினார்.