டில்லி

மோடியின் ஆதரவாளரான ரிபப்ளிக் டிவியின் அர்னாப் கோஸ்வாமி வேண்டுகோள் விடுத்தும் மோடி மீண்டும் பாகிஸ்தானுடன் அமைதி பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 14 ஆம் தேதி புல்வாமாவில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் ஈ முகமது இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டது.   இந்த தாக்குதலுக்கு உலக தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர்.  பிரதமர் மோடி தாம் இந்த தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்டப் போவதாக தெரிவித்தார்.   அத்துடன் பாகிஸ்தானுக்கு அந்நாட்டின் பாணியில் பதில் அளிக்க உள்ளதாகவும் கூறி இருந்தார்.

இந்நிலையில் பாகிஸ்தான் வருகை தந்த சவுதி பட்டத்துத்து இளவரசர் முகமது பின் சல்மான் அந்நாட்டுடன் பல வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.   இது இந்திய மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.   பிரதமர் மோடியின் முக்கிய ஆதரவாளரான ரிபப்ளிக் டிவியின் அர்னாப் கோஸ்வாமி  புல்வாமா தாக்குதல் குறித்து சவுதி அரேபிய இளவரசருடன் பேசி தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவிக்க வற்புறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

சமீபத்தில் வெளியான சவுதி அரேபிய இளவரசர் மற்றும் மோடியின் கூட்டறிக்கையில் இந்த தாக்குதலில் இடம் பெற்ற பாகிஸ்தானுக்கு கண்டனம்.தெரிவிக்கப் படவில்லை  என ஆங்கில ஊடகங்கள் கூறுகின்றன.

அந்த கூட்டறிக்கையில், “கடந்த 14 ஆம் தேதி இந்திய பாதுகாப்புப் படை மிது நடந்த தாக்குதலுக்கு இந்திய பிரதமரும் சவுதி இளவரசரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  இந்த தாக்குதலில் தொடர்புள்ள இரு நாடுகளும் கூடி பயங்கரவாதத்தை அழிக்க தேவையான பேச்சு வார்த்தைகளை நடத்த வேண்டும்.  அத்துடன் ஒரு நாட்டின் மீது மற்றொரு நாடு ஆயுத தாக்குதல் நடத்தாமல் இருப்பது குறித்தும் முடிவுக்கு வரவேண்டும்.     உலகின் பல நாடுகளை பயங்கரவாதமும் தீவிரவாதமும் அச்சுறுத்தி வருகின்றன.    அதனால் எந்த ஒரு நாட்டினரோ, இனத்தவரோ, மதத்தினரோ மற்றொரு நாடு, இனம் அல்லது மதத்தவர் மீது தாக்குதல் நடத்தக் கூடாது.

இரு நாடுகளிலும் உள்ள தீவிரவாத அமைப்புக்களுக்கு அந்தந்த நாடுகள் உதவி செய்யக் கூடாது.   அவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ஐநா சபையின் சர்வதேச தீவிரவாத எதிர்ப்பு கொள்கைக்கு இணங்க தீவிரவாதிகளை ஒடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என உள்ளதாகவும் எந்த ஒரு இடத்திலும் பாகிஸ்தான் என  பெயரை குறிப்பிடவில்லை எனவும் அந்த ஏடுகள் தெரிவித்துள்ளன.

மேலும் இந்த கூட்டறிக்கையில் ”இரு நாடுகளும் அண்டை நாடுகள் என்பதால் பரஸ்பர ஒற்றுமை பற்றும் பாதுகாப்ப்பை  நிர்ணயம் செய்ய இந்தியப் பிரதமர் மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நட்புறவு கொள்ள விரும்பினார்.  அதனால் மீண்டும் பாகிஸ்தானுடன் அமைதி பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என சவுதி அரசு இரு தரப்பினரையும் கேட்டுக் கொண்டது ஒப்புக் கொள்ளப்பட்டது” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்த ஊடகங்கள் தெரிவிக்கின்றன.