மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 326 ரன்களை எடுத்தது. இதன்மூலம் ஆஸ்திரேலியாவை விட 131 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

‍‍நேற்று 104 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இன்று தொடர்ந்து ஆடிய கேப்டன் ரஹானே 112 ரன்கள் எடுத்திருந்தபோது, கெடுவாய்ப்பாக மார்னஸ் லபுஷேனால் ரன்அவுட் செய்யப்பட்டார்.

நேற்று 40 ரன்களோடு களத்தில் இருந்த ஜடேஜா, இன்று 57 ரன்கள் எடுத்து ஸ்டார்க் பந்தில் அவுட்டானார். அஸ்வின் 14 ரன்களை மட்டுமே அடிக்க, உமேஷ் யாதவின் கணக்கு 9 மட்டுமே. பும்ரா டக்அவுட்டாக, கூடுதலாக கிடைத்த 22 ரன்களுடன் சேர்த்து இந்திய அணி மொத்தமாக 326 ரன்களைப் பெற்றது.

இதன்மூலம், ஆஸ்திரேலியாவை விட, முதல் இன்னிங்ஸில் 131 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் மற்றும் லயன் தலா 3 விக்க‍ெட்டுகளையும், கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹேசில்வுட் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தற்போது தனது இரண்டாம் இன்னிங்ஸை துவக்கியுள்ள ஆஸ்திரேலியா, 1 விக்கெட் இழப்பிற்கு 18 ரன்களை எடுத்துள்ளது.