இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 395 ரன்களை எடுத்த இந்திய அணி

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரண்டாவது நாளில் இந்தியா 395 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தினேஷ் கார்த்திக் 82 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு உதவினார்.

cricket

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20, 3ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 5போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரை 2-1 என்ற நிலையில் இந்திய அணி வென்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 3 ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதனை தொடர்ந்து 5போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இதற்கு முன்பாக 3நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் எக்சஸ் அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடி வருகிறது.

இந்த போட்டிகள் இங்கிலாந்தில் உள்ள கிளம்ஸ்போர்டில் நடந்து வருகிறது. 4 நாட்கள் நடக்க இருந்த டெஸ்ட் போட்டிகள் மோசமான மைதானம் காரணமாக 3 நாட்களாக குறைக்கப்பட்டன. முதல் நாள் போட்டியில் டாஸ் வென்ற கோலி தலைமையிலான இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இதையடுத்து களத்தில் இறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 299 ரன்களை எடுத்தது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் 82 ரன்களும், ஹர்திக் பாண்டியா 33 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதையடுத்து 2வது நாள் போட்டி தொடங்கப்பட்ட நிலையில் முதல் பந்திலேயே தினேஷ் கார்த்தில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்தடுத்து களமிறங்கிய கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா சொர்ப்ப ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். இந்நிலையில் இறுதிவரை களத்தில் இருந்த ஹர்திக் பாண்டியா அரை சதம் அடித்தார்.

இதனை தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்கில் 395 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.