இந்தூர்: வங்கசேத அணிக்கு எதிரான டெஸ்ட்டின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில், இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 493 ரன்களை எடுத்து, வங்கதேசத்தைவிட 343 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

தொடக்கவீரர் அகர்வால் 243 ரன்களும், புஜாரா 54 ரன்களும், துணைக் கேப்டன் ரஹானே 86 ரன்களும் அடித்த ஆட்டமிழக்க, சிறந்த ஆல்ரவுண்டர் ஜடேஜா 60 ரன்களை எடுத்து இன்னும் களத்தில் நிற்கிறார். அவருடன் தற்போது இணைந்து களத்தில் நிற்பவர் உமேஷ் யாதவ்.

ஜடேஜா ஒருநாள் இன்னிங்ஸூம், உமேஷ் யாதவ் டி-20 இன்னிங்ஸூம் ஆடி வருகின்றனர். ஜடேஜா 76 பந்துகளில் 60 ரன்களும், உமேஷ் யாதவ் 10 பந்துகளில் 25 ரன்களும் அடித்துள்ளனர்.

இந்திய அணி எப்படியும் வங்கதேசத்தைவிட 400 ரன்களுக்குமேல் முன்னிலை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் இன்னிங்ஸ் வெற்றிபெறவும் முயலும் என்று தெரிகிறது.

வங்கதேசத்தின் தரப்பில் அபு ஜயீத் மட்டும் மிரட்டினார். அவர் மொத்தமாக 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஹோசைன் மற்றும் ஹாசன் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.