பெங்களூரு:

னிதர்களைப் போன்ற ரோபோவான ‘வயோம் மித்ரா’வை விண்வெளி ஆராய்ச்சிக்காக அனுப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு முன்னோடியாக வரும் டிசம்பர் மாதம்  ரோபோவை  அனுப்பி ஆய்வு செய்ய  இஸ்ரோ திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் தயாரிக்கப்பட் மித்ரா எனும் ரோபோ கடந்த 2017ம்ஆண்டு ஐதராபாத்தில்  நடைபெற்ற உலகத் தொழில்முனைவோர் மாநாட்டி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ரோபோதான் இவான்கா ட்ரம்ப் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோரை வரவேற்றது. இது உலக தொழிலதிபர்களிடையே ஆச்சரியத்ரதை ஏற்படுத்தியது.

சாதாரண மனிர்களைப் போலவே (குறிப்பிட்டு கூற வேண்டுமேனால், ஷங்கரின் ரோபோ படத்தில் வரும் சிட்டி கேரக்டரை போன்றது) ஹியுமனாய்டு ரோபோவாக வடிவமைக்கப்பட் மித்ரா, ஒருவரின் முகத்தை வைத்ரே அடையாளம் கண்டுபிடித்து வரும், அத்துடன் குரல் வளம் உள்பட பல்வேறு வசதிகளுடன் உருவாக்கப்பட்டது.

தற்போது இந்த ஹியுமனாய்டு ரோபோவை விண்வெளி ஆய்வுக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. ‘வயோம் மித்ரா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பெண் ரோபோ, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சிக்கு முன்னோடியாக அனுப்பி ஆய்வு செய்ய திட்டமிட்டு உள்ளதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது.