டெல்லி:

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பபட்ட பல்வேறு நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து வழங்கி வரும் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் அந்த மருந்தை வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

உலக நாடுகளை புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தைக் குறைப்பதற்கு இதுவரை மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும் அதை கட்டுப்படுத்துவதற்கு மலேரியா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டுவரும் ஒரு வகை மருந்தான ஹைட்ராக்ஸிகுளோரோகுயினை பயன்படுத்தலாம் என்று கடந்த வாரம் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் பரிந்துரை செய்திருந்தது.

உலகளவில், ஹைட்ராக்ஹிகுளோரோகுயின் மாத்திரைகள் இந்தியாவில் தான் அதிகளவு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட துவங்கியதும் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்த மாத்திரைகள் வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட பல நாட்டு தலைவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதனையடுத்து, மனிதநேய அடிப்படையில் ஹைட்ராக்ஹிகுளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா முடிவு செய்தது. மாத்திரைகளும் ஏற்றுமதி செய்யப்பட்டன.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பபட்ட பல்வேறு நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து வழங்கி வரும் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் அந்த மருந்தை வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அரபு நாடுகளிலும் கொரோனா பரவல் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. அமீரகம் இன்று ஒரு நாளில் மட்டும் 460 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர்.