அடிலெய்டு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில், இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 36 ரன்களுக்கு தனது இன்னிங்ஸை முடித்துக்கொண்ட இந்தியா, ஆஸ்திரேலியா வெல்ல, முதல் இன்னிங்ஸ் முன்னிலையைச் சேர்த்து 90 ரன்களை நிர்ணயம் செய்துள்ளது.

36 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ரிடையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். இதனால் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் மட்டும், புஜாரா, ரஹானே மற்றும் அஸ்வின் ஆகிய 3 பேர் டக்அவுட் ஆனார்கள். மயங்க் அகர்வால் அடித்த 9 ரன்கள்தான் அதிகபட்ச ரன்கள். ஒரு பேட்ஸ்மென்கூட, இரட்டை இலக்க ரன்களை எட்டவில்லை என்பதுதான் கொடுமையிலும் கொடுமை!

இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா சார்பாக அடிக்கப்பட்ட பவுண்டரிகளின் எண்ணிக்கை 4. டெஸ்ட் வரலாற்றில், இந்திய அணியின் மோசமான இன்னிங்ஸ்களில் ஒன்றாக இது கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா தரப்பில் 3 பந்துவீச்சாளர்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டனர். இதில் ஸ்டார்க் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. ஹேசில்வுட் 5 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.