அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளையே மிரள வைக்கும் வல்லமை படைத்த எஸ்-400 ட்ரையுஃம்ப் ரக ஏவுகணைகளை இந்தியா ரஷ்யாவிடமிருந்து வாங்குகிறது.

s400_5

இதற்கென மோடி அரசு கிட்டத்தட்ட ரூ 40 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளது. இந்த எஸ்-400 ட்ரையுஃம்ப் மட்டும் நமது ராணுவத்துடன் சேர்க்கப்பட்டுவிட்டால் இந்தியாவின் ராணுவ வலிமை மேலும் பல மடங்குகள் பெருகிவிடும். இது அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் அத்தனையும் அஞ்சும் பிரம்மாஸ்திரம் போன்ற ஆயுதமாகும். இது மறைந்திருந்து தாக்கி எதிரிகளின் அத்தனை இலக்குகளையும் ஒரே நேரத்தில் அழிக்கும் வல்லமை படைத்தது. நம்மை நோக்கி சீறிவரும் எந்த ஏவுகணையையும் வழிமறித்து அழிக்கும் வல்லமையும் இதற்கு உண்டு. சுமார் 400 கிலோமீட்டர் வரை பறந்து சென்று துல்லியமாக தாக்கும் திறன் படைத்தது இந்த ஏவுகணை.

s400_3

இந்த ஏவுகணை இதன் முந்தைய மாடலாகிய எஸ்-300-ஐ விட 2.5 மடங்கு வேகமாக பாய்ந்து சென்று தாக்கும் வல்லமை கொண்டது. இது ரஷ்ய படையின் பெருமைக்குரிய ஆயுதங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும் இது அமெரிக்காவின் மறைந்திருந்து தாக்கும் சூப்பர் பவர் ஆயுதமான எஃப்-35 ஜெட் போல ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான இலக்குகளை துல்லியமாக குறிவைத்து தகர்க்கும் திறன் கொண்டது. இதன் ரேடார்கள் மிகவும் சக்தி படைத்தவை.

s400_1

இந்த ஆயுதம் பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளை கொஞ்சம் மிரட்டி வைக்க உதவும். ஆனால் சீனா நமக்கு முன்பாகவே இதே ஏவுகணைகளை அதன் நட்பு நாடான ரஷ்யாவிடம் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை செய்து முடித்துவிட்டது. அடுத்த ஆண்டிலேயே இந்த ஏவுகணை சீனப் படையில் சேர்க்கப்பட்டுவிடும்.

s400_4

டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் கூற்றுப்படி இந்தியா வாங்கவிருக்கும் 5 எஸ்-400 ஏவுகணைகளில் மூன்றை மேற்கில் பாகிஸ்தானை நோக்கியும், இரண்டை கிழக்கில் சீனாவை நோக்கியும் நிறுத்தபோவதாக தெரிகிறது.