டொயோட்டோ மோட்டார் நிறுவனம் ஜப்பானின் சுசுகி நிறுவனத்துடன் இணைந்து ஆட்டோமொபைல் துறையில் சில புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வது தொடர்பாக ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

toyotto

இந்த ஒப்பந்தம் உறுதியானால் இந்தியாவிலும் ஆட்டோமொபைல் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்ப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் சுசுகி நிறுவனமும் மாருதி நிறுவனமும் இணைந்து செயல்படுகின்றன. இந்தியாவில் விற்கும் இரண்டு வாகனங்களில் ஒன்று இவர்களுடையது என்னும் அளவுக்கு இவர்களது கை இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையில் ஓங்கியிருக்கிறது. இந்த இரு நிறுவனங்களும் ஆர்ட்டிஃபிஷியல் இண்ட்டலிஜன்ஸ் மற்றும் ரோபோட்டிக்ஸ் துறையிலும் இணைந்து கலக்கப்போவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
சுசுகி மற்றும் டொயோட்டோ ஒப்பந்தம் குறித்து சுசுகி நிறுவனத்தின் தலைவர் அகியோ டொயோடா பேசும்போது, இதுவரை ஜப்பானும் இந்தியாவும் ஆட்டோமொபைல் தொழில்நுட்பத்தில் இணைந்து பணியாற்றிக்கொண்டிருக்கின்றன. நமது பழைய தொழில்நுட்பத்திலேயே தொடர்ந்து நீடித்திராமல் புதிய தொழில்நுட்பங்களை நோக்கி நகர வேண்டிய நேரம் இது. நம்முடன் நிஸான் மற்றும் ரெனால்ட் ஆகிய நிறுவங்களும் இணைந்து பணியாற்ற இருக்கின்றனர் என்றும், சுசுகி மற்றும் டொயோட்டோ நிறுவனங்கள் இணைந்து ஓட்டுநர் இல்லாத கார்களை உருவாக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
டொயோட்டோ நிறுவனத்தின் இந்திய பிரிவுக்கான சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் என்.ராஜா ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள செய்தியில், இந்த இரு நிறுவனங்களின் இணைவினால் ஏற்படும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை இந்திய சந்தையில் எப்படி செயலாக்குவது என்பது குறித்து ஆய்வு செய்வோம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.