இந்தியா தனது உற்பத்தி துறையை மேம்படுத்தவில்லை என்றால்…? – எச்சரிக்கும் நிபுணர்

புதுடெல்லி: இந்தியா தனது உற்பத்தி துறையை மேம்படுத்தவில்லை என்றால், பெரியளவிலான வேலையில்லா திண்டாட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளார் நோபல் பரிசுபெற்ற அமெரிக்க பொருளாதார அறிஞர் பால் க்ரக்மன்.

அவர் கூறியுள்ளதாவது; செயற்கை நுண்ணறிவு என்ற கருத்தாக்கம் குறித்து நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியுள்ளது. எதிர்காலத்தில், நோய் பகுப்பாய்வு பணியானது இந்தியாவிற்கு அவுட்சோர்ஸிங் முறையில் அளிக்கப்படலாம்.

ஜப்பானால் இனிமேலும் சிறப்பு பொருளாதார சக்தியாக திகழ முடியாது. ஏனெனில், அந்நாட்டில் பணிசெய்யும் தலைமுறை மறைந்து கொண்டுள்ளது. சீனாவிலும் அதே கதைதான்.

எனவே, இந்த சூழலில் பொருளாதார துறையில் முன்னணி வகிக்கும் வாய்ப்பு இந்தியாவிற்கே உள்ளது. ஆனால், தனது உற்பத்தித் துறையை அந்நாடு கட்டாயம் மேம்படுத்தியாக வேண்டும்.

உற்பத்தி துறை மேம்பாட்டில் நிலவும் மந்த நிலையானது, அந்நாட்டிற்கு எதிராக முடியும். இந்திய குடிமக்களுக்கான வேலை வாய்ப்புகள் கொடுக்கப்பட்டாக வேண்டும்.

மற்றொருபுறம் பார்க்கையில், இந்தியாவால் இன்னொரு உலகமயமாக்கல் அலையில் நீந்திசெல்ல முடியும். இந்தியாவின் வளர்ச்சிக் கதை என்பது தனித்துவமானது. சேவை தொழிலை உலகமயமாக்குவதால் பெரிய வாய்ப்புகள் உண்டாகும்” என்றுள்ளார்.