டிசம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் கோவிட் -19 தடுப்பு மருந்து இருக்க வேண்டும்: ஸீரம் நிறுவன தலைவர் ஆதார் பூனவல்லா

ஆக்ஸ்ஃபோர்டு கோவிட் –19 தடுப்பு மருந்தைத் தயாரிப்பதற்காக அஸ்ட்ராஜெனெகாவுடன் ஸீரம் நிறுவனம் கூட்டு சேர்ந்துள்ளது. இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல், SAdOx1 nCoV-19 இன் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட மனித பரிசோதனைகளை நடத்த ஸீரம் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளார். ஆரம்பகட்ட சோதனை முடிவுகள் இந்தத் தடுப்பு மருந்து மிகவும் பாதுகாப்பானது என்றும், வலுவான நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது என்றும் நிறுவியது குறிப்பிடத்தக்கது.

 புதுடெல்லி: தனித்துவ கொரோனா வைரஸுக்கு எதிராக டிசம்பர் மாதத்திற்குள் தடுப்பு மருந்து கொடுக்கப்பட வேண்டும் என்று ஸீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய தடுப்பு மருந்து உற்பத்தியாளராக இருக்கும் புனேவை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம், ஆக்ஸ்போர்டு / அஸ்ட்ராஜெனிகா கோவிட் -19 தடுப்பு மருந்தான ChAdOx1 nCoV-19 இன் சோதனைகளை இந்திய மருத்துவ கவுன்சில் (ஐசிஎம்ஆர்) உடன் இணைந்து விரைவில் இந்தியாவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் “கோவிஷீல்ட்” என்று அழைக்கப்படும் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனிகா தடுப்பு மருந்து  குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் ஒரு டோஸுக்கு அதிகபட்சமாக 3 அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 225) வரை இருக்கலாம் என்று ஸீரம் நிறுவனம் கூறியது. கடந்த வாரம், இந்தியா மற்றும் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்காக, எதிர்கால கோவிட் தடுப்பூசிகளின் 100 மில்லியன் டோஸ் வரை உற்பத்தி மற்றும் விநியோகத்தை மேம்படுத்துவதற்காக ஸீரம் நிறுவனம் பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் காவி, தி வேக்ஸின்அல்லையன்ஸ் ஆகியவற்றுடன் ஒரு முக்கிய ஒப்பந்தத்தை மேற்கொண்டது.

“இந்த ஆண்டின் இறுதிக்குள் நாம் ஒரு தடுப்பு மருந்தைக் கொண்டிருக்க வேண்டும். ஐசிஎம்ஆருடன் இணைந்து ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு இந்தியாவில் சோதனைகளை நடத்தவுள்ளோம் என்று பூனவல்லா சிஎன்பிசி-டிவி 18 – இடம் கூறினார். கோவிஷீல்ட் தடுப்பு மருந்துக்கான இறுதி விலை இரண்டு மாதங்களில் அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார். முன்னதாக, பூனவல்லா நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் 300 மில்லியன் முதல் 400 மில்லியன் டோஸ் தயாரிக்க திட்டமிட்டுள்ளது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Detail of covid-19 vaccine vials and syringe; novel coronavirus treatment and prevention research concept

இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் சோதனைகளின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் மாத இறுதிக்குள் புனே மற்றும் மும்பையில் சுமார்  4,000 முதல் 5,000 பேர் வரை ChAdOx1 nCoV-19 செலுத்தப்படுவார்கள் என்று நிறுவனம் முன்பு அறிவித்திருந்தது. இந்தியா மற்றும் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் என்விஎக்ஸ் கோவி 2373 (நோவாவாக்ஸின் கோவிட்- 19 தடுப்பு மருந்து) சந்தைப்படுத்துதலுக்காக அமெரிக்க நிறுவனமான நோவாவாக்ஸுடன் ஸீரம் நிறுவனம் கையெழுத்திட்டது.

Thank you: Mumbai Live