
புதுடெல்லி: ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் மிகவும் பலவீனமாக இருப்பதால், இந்த சூழலை இந்திய அணி சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று ஆலோசனை பகர்ந்துள்ளார் இந்திய முன்னாள் வீரர் கெளதம் கம்பீர்.
அவர் கூறியுள்ளதாவது, “தற்போது உலகளவில் சிறந்த 4 அணிகளின் பேட்டிங்கை ஒப்பிடும்போது, ஆஸ்திரேலியாவின் பேட்டிங் வரிசை மிகவும் பலவீனமாக உள்ளது. அந்த நாட்டின் பேட்ஸ்மென்கள் இன்னும் செட்டிலாகவில்லை.
அவர்களோடு ஒப்பிடும்போது, இங்கிலாந்து, நியூசிலாந்து நாடுகளின் பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. இந்தியாவின் பேட்டிங் வரிசை இன்னும் பலமாக உள்ளது.
நான் பார்த்தவரை, ஆஸ்திரேலியாவின் பேட்டிங் வரிசை இந்தளவிற்கு பலவீனமாக ஒருபோதும் இருந்தது கிடையாது. எனவே, இந்த சூழலை இந்திய அணி சிறப்பாக பயன்படுத்தி, டெஸ்ட் தொடரை கைப்பற்ற முயல வேண்டும்” என்றுள்ளார் அவர்.
[youtube-feed feed=1]