உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது என இந்திய கிரிக்கெட் கிளப் செயலாளர் பிசிசிஐக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

ind

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மே மாதம் 30ம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 14ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. சர்வதேச தரவரிசையில் சிறந்து விளங்கும் இந்திய அணி ஜூன் 16ம் தேதி பாகிஸ்தானுடன் மோதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடக் கூடாது என இந்திய கிரிக்கெட் கிளப் செயலாளர் சுரேஷ் பாஃப்னா, இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ.,க்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா குற்றம் சாட்டி வரும் நிலையில் அந்நாட்டு அணியுடன் நமது வீரர்கள் விளையாட வேண்டாம் என கூறப்பட்டு வருகிறது.

ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் தீவிரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதலில் 40க்கும் அதிகமான சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட ஜெய்த் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. நாட்டையே உலுக்கிய இந்த தாக்குதலுக்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வலுத்து வருகின்றனர். தீவிரவாதிகளுக்கு எதிராக இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு 40 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.