இந்தியாவில் நிறுத்தப்படும் இணையதள சேவை: 2019ல் 100க்கும் மேற்பட்ட முறை நிறுத்தம்

--

டெல்லி: இந்தியாவில் மட்டும் இந்த ஆண்டு 100க்கும் மேற்பட்ட முறை இணையதள சேவை நிறுத்தப்பட்டுள்ள விவரம் வெளிவந்துள்ளது.

2012ம் ஆண்டு முதல் இப்போது வரை 374 முறை இணையதள சேவை தடைப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் தான் சமீபமாக இதுபோன்ற நிலைமை காணப்பட்டது.

காஷ்மீரை எடுத்துக் கொண்டால் ஆக. 5ம் தேதி முதல் இணையசேவையே இல்லை. இணையசேவை தடை என்ற விஷயத்தில் உலகின் மற்ற நாடுகளை விட இந்தியா முன்னணியில் இருக்கிறது.

2012ம் ஆண்டில் இருந்து 2019ம் ஆண்டு வரை கணக்கிட்டால் ஒன்று என்ற மாநிலத்தில் இருந்து 14 மாநிலமாக இது அதிகரித்துள்ளது. குறிப்பாக குடியுரிமை எதிர்ப்பு போராட்டங்களால் டிச.19ல் டெல்லியில் இணைய வசதி நிறுத்தப்பட்டது.

2015ம் ஆண்டு ஜூலை முதல்2016ம் ஆண்டு ஜூன் வரை இணைய சேவை தடைபட்டதால் 968 மில்லியன் டாலர் வர்த்தகத்தை இந்தியா இழந்திருக்கிறது. தி திங்க் டேங்க் ப்ருக்கிங்ஸ் இன்ஸ்டியூசன் என்ற அமைப்பின் ஆய்வில் இது தெரிய வந்திருக்கிறது.