Random image

பங்களாதேஷ் துறைமுகங்களை பயன்படுத்திக் கொள்ள இந்தியா ஒப்பந்தம்

டாக்கா:

பங்களாதேஷ் துறைமுகங்களை வர்த்தக ரீதியான பயன்படுத்திக் கொள்ள இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்திய வடகிழக்கில் உள்ள 7 மாநிலங்களை இணைக்க ஒரே ஒரு தரை வழிப்பாதை மட்டுமே உள்ளது. திரிபுரா, மிசோரம் போன்ற மாநிலங்களுக்கு சரக்குகளை எடுத்துச் செல்வதில் சிரமமும், தாமதமும் ஏற்படுகிறது.

இந்நிலையில் பங்களாதேஷில் உள்ள சிட்டகாங், மோங்லா துறைமுகங்களை வர்த்தக ரீதியாக பயன்படுத்த அந்நாட்டுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இந்திய துறைமுகங்களில் இருந்து இந்த இரு துறைமுகங்களுக்கு சரக்குகள் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து சாலை, நீர்வழி போக்குவரத்த மூலம் எளிதாக இந்திய பகுதிக்கு எடுத்துச் செல்ல முடியும்.

இந்த ஒப்பந்தத்தின் வரைவுக்கு பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இதை புதுப்பிக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளுக்கும் இந்த துறைமுகம் மூலம் சரக்குகள் அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.