ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன் – இந்திய நம்பிக்கை நட்சத்திரம் சிந்து தோல்வி!

லண்டன்: ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன் தொடரில், ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் சிந்து, காலிறுதியோடு வெளியேறினார்.

காலிறுதிப் போட்டியில், ஜப்பான் நாட்டின் ஓகுஹராவை எதிர்கொண்டார் சிந்து. இப்போட்டியில், முதல் செட்டை 21-12 என்ற கணக்கில் கைப்பற்றிய சிந்து, இரண்டாவது செட்டை 15-21 என்ற கணக்கில் இழந்தார்.

மூன்றாவது செட்டை 13-21 என்ற கணக்கில் இழந்த சிந்து, போட்டியையும் இழந்தார். இதன்மூலம் அவரின் கோப்பை வெல்லும் வாய்ப்பு தகர்ந்தது. அதேசமயம், சிந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு ஏற்கனவே தகுதிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று, பெண்கள் இரட்டையர் பிரிவிலும் இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா – சிக்கி ரெட்டி இணை, ஜப்பான் இணையிடம் 13-21 மற்றும் 14-21 என்ற கணக்கில் தோற்று வெளியேறியது.