வாஷிங்டன்:

பொருளாதார சுதந்திரக் கொள்கையில்  இந்தியா 143 ம் இடத்தில் உள்ளதாக அமெரிக்க பொருளாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஹெரிடேஜ் பவுண்டேசன் என்ற அமெரிக்க பொருளாதார ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில், இந்தியா கடந்த 5 ஆண்டுகளாக 7 சதவித வளர்ச்சி நிலையான வளர்ச்சியை பெற்றிருந்தது.

இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி 52.6 புள்ளிகளை பெற்று உலகநாடுகளில் 123 ஆவது இடத்தை பெற்றிருந்தது. ஆனால் ஹாங்காங், சிங்கப்பூர், நியுஸிலாந்து ஆகிய நாடுகள் முன்னணியில் இருந்தன.  தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஆப்கானிஸ்தான் 163 ஆம் இடத்தையும், மாலத்தீவு 157 ஆம் இடத்தையும் பெற்று இந்தியாவுக்கு கீழே இருந்தன. நேபாளம்,ஸ்ரீலங்கா, பாகிஸ்தான், பூட்டான் மற்றும் பங்களாதேஷ் நாடுகள் முறையே 125, 112,141,107,128  ஆம் இடங்களை பெற்று முன்னணியில் உள்ளன.

அமெரிக்காவுக்கு இரண்டாண்டுகளில் 4 முறை சென்ற இந்திய பிரதமர் மோடி இரு நாடுகளுக்கும் இடையில் இருக்கும் உறவை வலுபெறச் செய்ததாக அந்நிறுவனம் நினைவு கூர்ந்துள்ளது. உலக வர்த்தகத்தில் இந்தியாவுக்கு முக்கிய இடம் உள்ளது. ஆனால் இந்தியாவில் நிலவும் ஊழல்,  மோசமான கட்டுமானப்பணிகள், தரமற்ற நிர்வாகத்தால் மக்கள் பணம் வீணாவது போன்றவைகளை அந்நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது.

சீனா இந்தாண்டு அதன் வளர்ச்சி 57.4 புள்ளிகளை பெற்றுள்ளது. இது கடந்தாண்டின் வளர்ச்சியை விட 5 புள்ளி 4 சதவிதம் கூடுதல் வளர்ச்சியை பெற்றுள்ளது.

49 வளர்ந்த நாடுகளில் நார்வே, ஸ்வீடன் போன்ற நாடுகள் அதிகளவில் சாதனை புரிந்துள்ளன.