நாளை முதல் இந்தியா – தென் ஆப்ரிக்கா ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடக்கம்

ர்பன், தென் ஆப்ரிக்கா

நாளை முதல் இந்தியா – தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையே ஆன ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது.

இந்திய அணி தனது தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணத்தில் 3 போட்டிகள் கொண்ட் டெஸ்ட் தொடரில் விளையாடியது.   இந்த தொடரில் தென் ஆப்ரிக்கா 2-1 என்னும் கணக்கில் வென்றது.   இதைத் தொடர்ந்து நாளை முதல் 6 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் ஆரம்பமாகிறது.    அதன் பின்னர் 3 டி 20 போட்டிகள் நடக்க உள்ளது.

நடைபெற உள்ள ஒரு நாள் தொடர் பற்றிய விவரம் இதோ :

முதல் ஒரு நாள் – பிப்ரவரி 1 – டர்பன்

இரண்டாம் ஒரு நாள் – பிப்ரவரி 4 – சென்சூரியன்

மூன்றாம் ஒரு நாள் – பிப்ரவரி 7 – கேப்டவுன்

நான்காம் ஒரு நாள் – பிப்ரவரி 10 – ஜோகன்னஸ்பர்க்

ஐந்தாம் ஒரு நாள் – பிப்ரவரி 13 – போர்ட் எலிசபத்

ஆறாம் ஒரு நாள் – பிப்ரவரி 16 – சென்சூரியன்

கார்ட்டூன் கேலரி