இந்தியா-இலங்கை மீனவர்களுக்கிடையே 7ந்தேதி மீண்டும் பேச்சுவார்த்தை!

டில்லி,

ந்தியா – இலங்கை மீனவர்களுக்கிடையே வரும் 7ம் தேதி மீண்டும் கொழும்பில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

இந்தியா – இலங்கை மீனவர்களுக்கிடையே மீன் பிடிப்பதில் நீண்ட காலமாக எல்லைப் பிரச்சனை உள்ளது. இதன் காரணமாக தமிழக மீனவர்கள் அவ்வப்போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும், துப்பாக்கி சூட்டுக்கு பலியாவதும் தொடர் கதையாகவே உள்ளது.

ஏற்கனவே பல சுற்று பேச்சு வார்த்தை நடைபெற்றும் சுமூகமான உடன்பாடு ஏதும் ஏற்படாத நிலையில்  தற்போது மீண்டும் வரும் 7ந்தேதி கொழும்பில் பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்பில்  நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பு மீனவ சங்க பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்.

இந்த சந்திப்பின் போது, இலங்கை வசம் உள்ள படகுகளை விடுவிக்க வலியுறுத்தப்படும் என்றும், படகுகளை விடுவிக்காவிட்டால் கச்சத்தீவை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வும் தமிழக மீனவ சங்க தலைவர்கள் கூறியுள்ளனர்.