மோடி அரசின் கடும் உழைப்பு! – வங்கதேசத்தைவிட பொருளாதாரத்தில் பின்தங்கிய இந்தியா..!

தற்போதைய நிலையில், தன்னால் உருவாக்கப்பட்ட வங்கதேசத்தைவிட, பொருளாதாரத்தில், இந்தியா பின்தங்கியுள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

கடந்த 1971ம் ஆண்டு தனிநாடாக உருவான வங்கதேசம், உலகின் ஏழை நாடுகளின் பட்டியலில் மதிப்பிடக்கூடியதாகும். ஆனால், மோடி & குழுவினரின் புண்ணியத்தால், அது இந்தியாவை விட பணக்கார நாடு என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு நிலவரப்படி, வங்கதேசத்தின் பொருளாதார வளர்ச்சி 8%. கொரோனா முடக்கத்தால் அந்த வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டபோதும், 2020-2021 ஆண்டில், இது 4% என்ற அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 2020ம் ஆண்டில் அதன் ஜிடிபி மதிப்பீட்டின்படி, ஆப்ரிக்காவின் பல ஏழை நாடுகளைவிட, வங்கதேசம் மிக உயரத்தில் மதிப்பிடக்கூடியதாக மாறியுள்ளது. அதுமட்டுமில்லாமல், அந்த வளர்ச்சியானது, அந்தக் குட்டி நாட்டை, இந்தியாவைவிட ஒரு படி மேலே நிறுத்தியுள்ளது.

இந்த 2020ம் ஆண்டில், வங்கதேசம் ஒரு நபருக்கு 11.45 டாலர்களை அதிகளவில் உற்பத்தி செய்யும் என்று சர்வசேத நாணய நிதியம் மதிப்பிட்டுள்ளது. இந்திய நாணயம் அளவிற்கு, வங்கதேச நாயணம் பிரபலமாக இல்லாத நிலையிலும் இந்த வளர்ச்சி எட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.