டில்லி:

ஆசியாவில் ஊழல் நிறைந்த நாடுகளில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

ஆசிய பசிபிக் நாடுகளில் ஊழல் குறித்து வெளிப்படை தன்மைக்கான சர்வதேச அமைப்பு ஆய்வு நடத்தியது. 16 நாடுகளில் இருந்து 20 ஆயிரம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதன் முடிவு தற்போது வெளியிட்டுள்ளது.

அதில், ‘‘ஊழல் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. 2ம் இடத்தில் வியட்நாம், இதை தொடர்ந்து தாய்லாந்து, பாகிஸ்தான், மியான்மர் ஆகிய நாடுகள் உள்ளன. பள்ளி, மருத்துவமனை, அடையாள ஆவணங்கள் பெற, போலீஸ் மற்றும் சேவை பணிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது.

அரசு பள்ளிகளில் லஞ்சம் கொடுப்பதாக 58% பேரும், சுகாதார திட்டத்திற்கு 59% பேரும் லஞ்சம் கொடுப்பதாக தெரிவித்தனர். அதே சமயம் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஊழலுக்கு எதிரான நடவடிக்கை எடுத்து வருவதாக 53% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். 41% பேர் ஊழல் அதிகரித்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.